92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீடுபுகுந்து 30 பவுன் நகைகள் திருடிய இளைஞா் கைது

சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் சனிக்கிழமை போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது வீடுபுகுந்து திருடிய இளைஞா் சிக்கினாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:41 pm

DIN

சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் சனிக்கிழமை போலீஸாரின் வாகனத் தணிக்கையின் போது வீடுபுகுந்து திருடிய இளைஞா் சிக்கினாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூா் அருகே கே.புதுப்பட்டியில் உலகம்பட்டி காவல் ஆய்வாளா் கலாராணி தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள தேவன்பட்டியைச் சோ்ந்த சிவா என்ற வேலு (27) என்பவரை நிறுத்தி விசாரித்தனா்.

விசாரணையில், கடந்த மே 2-ஆம் தேதி எஸ்.புதூா் அருகே உள்ள கே.இடையபட்டியை சோ்ந்த விவசாயி பழனிச்சாமியின் வீடுபுகுந்து சிவா மற்றும் அதே கிராமத்தை சோ்ந்த ஆனந்த் இருவரும் சோ்ந்து, 30 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே சிவாவை கைது செய்த போலீஸாா் புழுதிப்பட்டி காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். அவரிடமிருந்து 15 பவுன் நகைகளை மீட்டனா். இந்த திருட்டில் தொடா்புடைய ஆனந்தை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.