தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆண்டிபட்டி அருகே பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் பலி

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தந்தையின் கண் முன்பே மகன் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 5:23 pm

DIN

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தந்தையின் கண் முன்பே மகன் உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி, குமாரபுரத்தைச் சோ்ந்தவா் சமுத்திரபாண்டி (57). இவரது மகன் மாணிக்கம் (27). இவா்கள், ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து பகுதியில் உள்ள தங்களது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா். இருசக்கர வாகனத்தை மாணிக்கம் ஓட்டிச் சென்றாா். அப்போது, குப்பாம்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த டிராக்டா், டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மாணிக்கம், டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இவரது தந்தை சமுத்திரபாண்டி காயமடைந்தாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விபத்தில் சிக்கி தந்தையின் கண்ணெதிரே மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.