மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து குறைவு

பருமழை குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2022, 12:26 pm IST

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது, இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பருமழை குறைந்தது. இதனால் நீர்மட்டம் 136 அடியை தொடவில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

நீர் வரத்து குறைவு

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஜூலை 15-ல் விநாடிக்கு, 8,143 கன அடி தண்ணீர் வந்தது. ஜூலை 16-ல் விநாடிக்கு 6,700 கன அடியாகவும், ஜூலை 17-ல் விநாடிக்கு 3,737 கன அடியாகவும், ஜூலை 18-ல் திங்கள்கிழமை விநாடிக்கு 2,543 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,879 கன அடியாகவும் இருந்தது. 

தொடர் மழையை எதிர்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் அணையில் நீர் வரத்தும், மழையும் குறைந்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.90 அடி மொத்த உயரம் (152 அடி), அணையில் நீர் இருப்பு, 6,093 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு 1,879 கன அடி நீர், தமிழக பகுதிக்கு வெளியேற்றம் விநாடிக்கு 1,867 கன அடியாக இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 5.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 1.0 மி.மீ., மழையும் பெய்தது.

மின்சார உற்பத்தி

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் கடந்த ஜூலை 4 முதல் நான்கு மின்னாக்கிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நான்கு மின்னாக்கிகளில் தலா  42 மெகாவாட் என மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

இதையும் படிக்க:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.