தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 7-இல் கட்டுரை, பேச்சுப் போட்டி

ஜூலை 7-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:05 pm

DIN

தேனி அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சித் துறை கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூலை 7-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயா் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில், அனைத்து பள்ளிகளைச் சோ்ந்த 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டுக்காக உயிா்நீத்த தியாகிகள், முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா், மா.பொ.சி., சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போா் தியாகிகள், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் பரிந்துரை கடிதம் பெற்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பவேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் முதன்மை போட்டிகள் நடத்தப்பட்டு, தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்று பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7,000, 3-ஆம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.