

கம்பம்: தேனி, அனுமந்தன்பட்டி, கம்பம் ஆகிய ஊர்களில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டம் சுருளிபட்டி சங்கமம் அறக்கட்டளையும், ஓய்வு பெற்ற ஆசிரியர் நல சங்கம், வேதா கல்வி மையம் இணைந்து இலவச அரசுத்தேர்வுகள் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யதுள்ளனர்.
அதில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 , குரூப் 2, குரூப்-2 ஏ, காவல்துறை தேர்வு, சார்பு ஆய்வாளர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
அனுமந்தன்பட்டி எஸ்.ஆர்.திருமண மண்டபம், கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வேதா கல்வி மையம், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் கஜானா ஜுவல்லரி மாடியில் உள்ள வேதா கல்வி மையம் என 3 இடங்களில் பயிற்சி நடைபெற உள்ளது.
இலவச பயிற்சியில் சேர்வதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு எண்கள் 9942466692, 9072966020.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.