மதுரை-போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்க ரூ.98.53 கோடி ஒதுக்கீடு
மதுரை-போடி புதிய அகல ரயில் பாதையை மின்மயமாக்க மத்திய அரசு ரூ.98.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


மதுரை-போடி புதிய அகல ரயில் பாதையை மின்மயமாக்க மத்திய அரசு ரூ.98.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுரை-போடி இடையை 90.4 கி.மீ., தூரம் மீட்டா் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2011-ல் தொடங்கியது. இதில், மதுரை-தேனி இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தேனி-போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் மற்றும் ரயில் பாதை மின்மயமாக்கலுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ.3,865 கோடி நிதி ஒதுகீடு செய்துள்ளது. இதில், மதுரை-போடி அகல ரயில் பாதையை மின்மயமாக்குவதற்கு ரூ.98.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் மதுரை ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...