கம்பம்: தேனி மாவட்டம் கூடலூருக்கு செல்ல இரவு பல மணி நேரங்களாக பேருந்து இல்லாமல் ஆண், பெண், குழந்தைகள் காத்திருந்து, சிரமத்திற்கு ஆளாகினர்.
தேனி மாவட்டம் கூடலூர், கேரள எல்லையை இணைக்கும் பகுதியாக உள்ளது. தற்போது வீரபாண்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடலூர் மற்றும் சுற்று வட்டாரத்தை பொதுமக்கள் வீரபாண்டி மாரியம்மன் கோயிலுக்கு சென்று வருவார்கள்.
வெள்ளிக்கிழமை கோயில் தேரோட்டம் என்பதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். திருவிழாவை முடித்து விட்டு கூடலூர் மற்றும் அருகே உள்ள ஊர்களைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் ஊர்களுக்கு செல்ல பல மணிநேரம் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதுபற்றி ரோந்து காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. கம்பம் பணிமனை போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பேருந்துகளை இயக்க செய்தனர்.
இதுபற்றி கூடலூர் மக்கள் மன்ற செயலாளர் ப.புதுராஜா கூறியது, விழா காலங்களில் போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி பயணி மற்றும் பக்தர்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


