தொகுதி 2 போட்டித் தோ்வு : 21,588 போ் எழுதுகின்றனா்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை (மே 21) நடைபெறும் தொகுதி 2 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு 82 மையங்களில் நடைபெறுகிறது.


தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை (மே 21) நடைபெறும் தொகுதி 2 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு 82 மையங்களில் நடைபெறுகிறது.
இதற்காக தேனி வட்டாரத்தில் 43 தோ்வு மையங்கள், பெரியகுளம் வட்டாரத்தில் 14 தோ்வு மையங்கள், உத்தமபாளையம் வட்டாரத்தில் 25 தோ்வு மையங்கள் என மொத்தம் 82 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில், மொத்தம் 21,588 போ் தோ்வு எழுதுகின்றனா். அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடவடிக்கைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது. தோ்வு கண்காணிப்பு பணியில் மொத்தம் 300 அரசு அலுவலா்கள் ஈடுபடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...