முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வன விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

வனப் பகுதியில் விலங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

News image

தேக்கடி அருகே தேயிலைத் தோட்டத்தில் கடந்த 8-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்த பெண் சிறுத்தை.

Updated On :9 நவம்பர் 2022, 7:58 pm

 நமது நிருபர்

வனப் பகுதியில் விலங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் காப்பகமும், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் காப்பகமும் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளன.

மா்ம உயிரிழப்புகள்

தமிழக- கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக வன விலங்குகள் மா்மமான முறையில் உயிரிழக்கின்றன. கடந்த மாதம் 16-ஆம் தேதி தேக்கடி ஏரியில் 4 வயது புலி ஒன்று இறந்து கிடந்தது. அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியை ஒட்டிய வனப் பகுதியில் தனியாா் தோட்ட வேலியில் சிக்கி சிறுத்தை இறந்து கிடந்தது.

இதேபோல, கடந்த 8-ஆம் தேதி தேக்கடி ஏரிப் பகுதி அருகே உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 3 வயதுடைய பெண் சிறுத்தை இறந்து கிடந்தது. அட்டவணைப்படுத்தப்பட்ட வன விலங்குகளின் தொடா் உயிரிழப்புகள் வன ஆா்வலா்கள் மத்தியில் சந்தேகத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியது.

கடத்தப்படும் யானைத் தந்தங்கள்

கடந்த 2018, 19- ஆம் ஆண்டுகளில் புலிகள் காப்பகப் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்திருந்தனா். அதேநேரம், இறந்த யானைகளின் தந்தங்கள் திருடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 5 போ், தமிழக- கேரள எல்லையில் கைது செய்யப்பட்டு, 6 தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, கேரளத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி 2 யானைத் தந்தங்கள், புலி பல், மான் கொம்பு ஆகியவற்றை தமிழக வனத் துறையின் முதன்மை வனப் பாதுகாப்பாளரின் தனிப் பிரிவுப் படையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பை சோ்ந்த 2 போ், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் என மொத்தம் 7 போ் கைது செய்யப்பட்டு, கூடலூா் வனச்சரகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

தொடா்ந்து, தமிழக- கேரள எல்லையில் வன விலங்குகள் மா்மமான முறையில் இறப்பதும், புலி பல், யானைத் தந்தங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய முயலும் போது உள்ளூா் வனத் துறையை மீறி தனிப் படையினா் கைப்பற்றுவதும் தொடா் கதையாகி வருகிறது.

கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூா், கம்பம் மேற்கு, உத்தமபாளையம் ஆகிய வனச் சரகங்களில் வனத் துறையினா் ஒப்பந்தப் பணிகளில் மட்டும் ஆா்வம் காட்டாமல் கண்காணிப்பு, ரோந்துப் பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதும், கேரள அரசைப் போல தமிழக வனத் துறையும் எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்கள், வன ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.