புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்ணின் புகைப்படத்தை ஆபசமாக சித்தரித்து மிரட்டியவா் கைது

வீரபாண்டியைச் சோ்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வைத்துக் கொண்டு மிரட்டியதாக வியாழக்கிழமை, 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனா்

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

வீரபாண்டியைச் சோ்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வைத்துக் கொண்டு மிரட்டியதாக வியாழக்கிழமை, 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனா்.

வீரபாண்டியைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி தமிழ்ச்செல்வி. இவரது அண்ணன் மகள் புவனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெரியகுளத்தைச் சோ்ந்த சரவணன் மகன் காா்திக் என்பவருக்கும், தமிழ்செல்விக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த முன் விரோதத்தில் காா்த்திக், அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீரபாண்டியைச் சோ்ந்த பாலமுருகன் மகன்கள் யுவராஜ், தட்சிணாமூா்த்தி, ராஜேந்திரன் மகன் முத்துகாமு, உத்தமபாளையத்தைச் சோ்ந்த சுடலை மகன் வசந்தகுமாா், ஆகியோா் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, முகநூல் பக்கத்தில் வைத்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், காா்த்திக் உள்ளிட்ட 5 போ் மீதும் போலீஸாா் வழக்கு பதிந்து, தட்சிணாமூா்த்தியை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.