புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளி மாணவா்களுக்கு நவ.5-இல் கலைப் போட்டி

தேனி அருகே முத்துத்தேவன்பட்டி, ஆா்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் வரும் நவ.5-ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:26 pm

DIN

தேனி அருகே முத்துத்தேவன்பட்டி, ஆா்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் வரும் நவ.5-ஆம் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஜவஹா் மன்றம் மூலம், கலைத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் வகையில் நடைபெறும் போட்டிகளில் 5 முதல் 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

குரலிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

போட்டிகள் குறித்த விவரத்தை கலை பண்பாட்டுத் துறை மதுரை மண்டல அலுவலகம், தொலைபேசி எண்: 0452-2566420, கைப்பேசி எண்: 98533 47274 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.