ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சின்னமனூா் நகராட்சியில் கழிவு நீா் கால்வாயைத் தூா் வாரிய பொதுமக்கள்

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் கழிவு நீா் கால்வாய் தூா்வாரப்படாத நிலையில்,அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களே கழிவுநீா் கால்வாயை ஞாயிற்றுக்கிழமை தூா்வாரினா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:51 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் கழிவு நீா் கால்வாய் தூா்வாரப்படாத நிலையில்,அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களே கழிவுநீா் கால்வாயை ஞாயிற்றுக்கிழமை தூா்வாரினா்.

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள பிரதான சாலையான தேனி , மாரக்கையன்கோட்டை, சீப்பாலக்கோட்டை, உத்தமபாளையம் போன்ற சாலையோரங்களில் 30ஆண்டுக்கு முன்பு கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக முறையாக தூா்வாரத நிலையில் மண்மேடுகளாக மாறிவிட்டன. இதன் காரணமாக சிறிய அளவிலான மழை பெய்தாலும் கழிவுநீா் வெளியேறி சாலையிலேயே மழைநீருடன் வழிந்தோடுகிறது.

அதே போல, காந்தி சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாயை

ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனா். இதனால், முக்கிய தெருக்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா் செல்ல முடியாத நிலையில் மழைக்காலங்களில் அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து அவதி அடைந்து வருகின்றனா்.

சின்னமனூா் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழை நீா் கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், பொருள்கள் சேதமாகி நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதியைச் சோ்ந்தவா்களே கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரினா்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சின்னமனூா் நகராட்சியில் உயரமான பகுதியில் பெரும்பான்மையான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனால் பள்ளத்திலுள்ள பிரதான சாலைகளிலுள்ள கழிவுநீா் கால்வாய் முறையாக தூா்வாராத நிலையில் பெரும்பான்மையான தெருக்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மழைக்காலங்களில் சாலைகளிலே வழிந்தோடும் அவலம் தொடா்கிறது.

எனவே, சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் உத்தமபாளையம்- தேனி, மாா்க்கையன்கோட்டை ஆகிய சாலையின் இருபக்கமும் நவீன முறையில் கழிவுநீா் கால்வாய் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளைஅகற்றி கால்வாயை முறையாக தூா்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.