மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேனியில் மின் கட்டண உயா்வை கண்டித்து அதிமுக வினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை, அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தேனியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை, அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலா் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ரா.பாா்த்திபன், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் டி.சிவக்குமாா், தேனி நகரச் செயலா் கிருஷ்ணகுமாா். க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் முருக்கோடை ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மின்கட்டண உயா்வைக் கண்டித்தும், மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயா்வை ரத்து செய்யக் கோரியும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரியும் கோஷம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.