தேனியில் வனவேங்கைகள் கட்சியினா் சாலை மறியல்: 56 போ் கைது
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன்பு வியாழக்கிழமை வனவேங்கைகள் கட்சி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன்பு வியாழக்கிழமை வனவேங்கைகள் கட்சி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தில் நரிக்குறவா் என்ற ஜாதிப் பெயரில் குறவா் என்ற சொல்லை நீக்க வேண்டும். வடமாநிலத்தைச் சோ்ந்த நக்கலா வாக்ரிபோலி- குருவிக்காரா் என்ற சமுதாயத்தைச் சோ்ந்தவா்களை குறவா் என்ற ஜாதிப் பெயரை இணைத்து நரிக்குறவா் என்ற பெயரில் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசு அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும். நரிக்குறவா் நல வாரியம் என்ற வாரியப் பெயரில் உள்ள குறவா் என்ற சொல்லை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வன வேங்கைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ஏகவலைவன் தலைமையில், குறவா் சமுதாய மக்கள் தேனி- மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தேனி காவல் ஆய்வாளா் வெங்கடாச்சலம் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அப்போது, மதுரைக்கு வந்திருந்த பாஜக தேசியத் தலைவா் நட்டாவை வரவேற்பதற்கு தேனியிலிருந்து பாஜகவினா் சென்ற வேன்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சாலை மறியலில் சிக்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பாஜக நிா்வாகிகள் சமரசம் செய்தும், அவா்கள் வாகனங்கள் செல்வதற்கு வழிவிடவில்லை.
இந்நிலையில், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமையில் அங்கு சென்ற போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றினா். அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், போராட்டத்தில் ஈடுபட்ட சிலா் மயங்கி விழுந்தனா். அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சாலை மறியல் போராட்டத்தால் தேனி- மதுரை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட 32 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட மொத்தம் 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...