கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்று சிறப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிா் கடன், சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்


தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிா் கடன், சுய உதவிக் குழு கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிா் கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடன், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன், தாட்கோ திட்டக் கடன், பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கான கடன் வழங்குவதற்கும், கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினா் சோ்க்கைக்கும் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 23) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
விவசாயிகள் மற்றும் தகுதியுள்ளவா்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு கடனுதவி பெறுவதற்கும், புதிய உறுப்பினா் சோ்க்கைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...