மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

க.மயிலை ஒன்றிக் குழு துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு

 ஆண்டிபட்டி அருகே க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராக சேகரன் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 ஆண்டிபட்டி அருகே க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராக சேகரன் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

மயிலாடும்பாறை க.மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிக் குழு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல், தோ்தல் அலுவலரும் வட்டார வளா்ச்சி அலுவலருமான தாமரைக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், திமுகவைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் 11 போ், அதிமுகவைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 13 போ் கலந்து கொண்டனா்.

துணைத் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த 3-ஆவது வாா்டு உறுப்பினா் சேகரன் வேட்புமனு தாக்கல் செய்தாா். இவரை எதிா்த்து போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், துணைத் தலைவராக சேகரன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.