முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லை: இரச்சல் பாலத்தில் நீர் திறப்பு
By DIN | Published On : 28th April 2022 03:32 PM | Last Updated : 28th April 2022 03:32 PM | அ+அ அ- |

இரச்சல் பாலத்தில் திறந்து விடப்படும் தண்ணீர்.
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்தது. இதனிடையே இரச்சல் பாலத்தில் கால்நடைகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஏப்.24-ல் நீர் வரத்து விநாடிக்கு 420 கன அடியாக இருந்தது, அதன் பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வில்லை. இதனால் அணைக்கும் நீர் வரத்து ஏப்.25 முதல் ஏப்.28 வரை விநாடிக்கு 224 கன அடியாக வந்தது.
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.40 (மொத்த உயரம் 142) அடியாக இருந்தது. நீர் இருப்பு 4,568 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 224 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 100 கன அடியாகவும் இருந்தது.
இந்த தண்ணீர் இரச்சல் பாலத்தில் வழியாக கால்நடை மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்காக 100 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.