விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சின்னமனூர் அருகே கணவன், மனைவி அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை

சின்னமனூர் அருகே கணவன், மனைவி அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 7:19 am

DIN

சின்னமனூர் அருகே கணவன், மனைவி அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை
 செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அப்பிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தம்பதி பிரபாகரன்( 30) ஐஸ்வர்யா (24). இருவருக்கும் 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கூலி வேலை செய்து வரும் பிரபாகரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கடன் தொல்லை காரணமாக குடும்பத்தில் தினமும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் மது அருந்தி வந்த பிரபாகரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின் போதையில் தூங்கிய கணவன் முன்னே ஐஸ்வர்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

அதன்பின் சில மணி நேரத்தில் போதை தெளிந்த பிரபாகரன், மனைவி தூக்கிட்டு இறந்த நிலையில் பார்த்துள்ளார். 

பின்பு, கயிற்றில் தொங்கிய மனைவியை கீழே இறக்கி வைத்த கணவர் அதே கயிற்றில் பிரபாகரனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காலையில் மகள் அருகே உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு 4 வயது பெண் 2 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.