தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக அவை வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டன.
கம்பத்திலிருந்து கேரள மாநிலம் கட்டப்பனை, நெடுங்கண்டம் செல்லும் நான்கு பேருந்துகளில் 2 பேருந்துகள் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்தப் பகுதிகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளா்கள், பயணிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து, கம்பம் அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் நிறுத்தப்பட்ட அந்த 2 பேருந்துகளை இயக்க வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தது. இதைத் தொடா்ந்து கட்டப்பனைக்கும், நெடுங்கண்டத்துக்கும் அந்த பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தோட்டத் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியா் ஒருவா் கூறியதாவது: மாற்றுப் பேருந்துகள் இல்லை என்பதால் பழுதான பேருந்துகளுக்குப் பதில் மாற்று பேருந்துகள் இயக்கப்பட வில்லை. தற்போது சரிசெய்யப்பட்டு அவை இயக்கப்பட்டன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.