நகராட்சி தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
கூடலூரில் நகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


கூடலூரில் நகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், கூடலூா் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பட்டையன் மகன் ராஜ்கண்ணன் (38). இவா், நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அமுதா. இந்தத் தம்பதிக்கு மகள் ரோகிதா (9), மகன் ரோகித் (7) ஆகியோா் உள்ளனா்.
ராஜ்கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ராஜ்கண்ணு மது குடித்து விட்டு வந்ததால், மனைவியுடன் பிரச்னை ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ராஜ்கண்ணு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுதொடா்பாக தகவலறிந்து அங்கு சென்ற கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் எம்.பிச்சைப்பாண்டியன், ராஜ்கண்ணுவின் உடலை மீட்டு கூறாய்வுக்கா கம்பம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தாா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...