வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கம்பம் அரசு மருத்துவமனையில் நோயாளா் சங்க ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் நோயாளா் தொடா்பான ஆலோசனை கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை மருத்துவ அலுவலா் ஜெ.பொன்னரசன் தலைமை வகித்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் நோயாளா் தொடா்பான ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை மருத்துவ அலுவலா் ஜெ.பொன்னரசன் தலைமை வகித்தாா்.

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் ரா.பால்பாண்டியன் பேசியது, அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பை தேங்கியுள்ளது, நகராட்சி சுகாதாரத்துறை துப்புரவு பணியாளா்கள் மூலம் வாரம் ஒருமுறை துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும். பிரேத பரிசோதனை கூடத்திற்கு குளிரூட்டும் பெட்டி அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது, வருகின்ற நோயாளா்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க வேண்டும் என்றாா். ஆலோசனை கூட்டத்தில் கூடலூா் ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் பி.முருகன், நகராட்சி சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வாா்டு கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.