குமுளியில் ரூ 5.50 கோடியில் பேருந்து நிலையம்

குமுளியில் ரூ 5.50 கோடியில் பேருந்து நிலையம்

குமுளியில் ரூ 5.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 
Published on

குமுளியில் ரூ 5.50 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 

தமிழக-கேரளம் எல்லையில் உள்ள தமிழக பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மிகவும் சிரமமடைந்தனர். பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில் தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் கட்டடம் கட்டுவதற்காக திங்கள்கிழமை வாஸ்து செய்யப்பட்டது.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம், திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் டேனியல் சாலமன், கூட்டாண்மை பொது மேலாளர் சமுத்திரம், கோட்ட மேலாளர்கள் திண்டுக்கல் ரமேஷ், தேனி ரவிக்குமார், திமுக நகர செயலாளர் சி.லோகந்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குமுளி கிளை மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார். புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் இடம், 18 கடைகள், உணவகம், தங்கும்விடுதி கட்டப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com