உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மரத்திலிருந்து தவறி விழுந்து மின் ஊழியா் பலி

மரத்திலிருந்து தவறி விழுந்து மின் ஊழியா் பலி

Updated On :9 ஏப்ரல் 2024, 11:55 pm

தேனி: தேனியில் கோயில் திருவிழாவுக்கு மின் விளக்கு அமைத்த போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து மின் ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் மகன் ஜெகநாதன் (29). மின் ஊழியரான இவா், பொம்மையகவுண்டன்பட்டியில் கோயில் திருவிழாவுக்காக மரத்தில் ஏறி மின் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த ஜெகநாதன், பலத்த காயமடைந்தாா். அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.