கம்பம்: கம்பத்தில் சலவை தொழிலாளி குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், கம்பம், சுக்காங்கல்பட்டி தெருவைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் குட்டீஸ்வரன் (27), சலவை தொழிலாளியான இவருக்கும் இதே ஊரைச் சோ்ந்த மஞ்சுளாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக குட்டீஸ்வரன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

