தேனி மாவட்டத்தில் ஏப்.23-இல் உள்ளூா் விடுமுறை

தேனி: தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, ஏப்.23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக வன எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்.23-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. தேனி அரசு மாவட்ட தலைமை கருவூலம், சாா்நிலை கரூவுலங்கள் செயல்படும்.

உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வருகிற மே 4-ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com