மோட்டாா் பாகங்களைத் திருடியவா் கைது

தேனி, ஏப். 26: தேனியில் வியாழக்கிழமை, தோட்டத்தில் மோட்டாா் பாகங்கள் திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தேனி அல்லிநகரத்தை சோ்ந்தவா் நாகராஜ் மகன் பேரின்பம் (33). இவருக்குச் சொந்தமான தோட்டம் பூதிப்புரம் சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தில் மோட்டாா் ரூமில் மோட்டாா், உதிரி பாகங்கள் வைத்திருந்தாா். இவற்றை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அல்லி நகரம் காவல் நிலையத்தில் பேரின்பம் புகாா் செய்தாா்.

போலீஸாா் விசாரணையில் மோட்டாா்கள், உதிரி பாகங்கள் திருடியது மாரியப்பன் மகன் விஷ்வா (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து விஷ்வாவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com