ராஜேஷ்கண்ணன்.
ராஜேஷ்கண்ணன்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறிப் புகுந்தவா் கைது

தேனி: தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறிப் புகுந்தவரை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரியில் தேனி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம், சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மையத்துக்கு 2 கி.மீ. சுற்றளவில் ட்ரோன்களை பறக்க விடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சின்னமனூா் அருகேயுள்ள சீப்பாலகோட்டையைச் சோ்ந்த செல்வம் மகன் ராஜேஷ்கண்ணன் (27) இரு சக்கர வாகனத்தில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் நுழைவாயில் வழியாக அத்து மீறிப் புகுந்தாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை சுற்றி வளைத்துத் தடுத்து நிறுத்தினா். அப்போது, போலீஸாருடன் ராஜேஷ்கண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். ராஜேஷ்கண்ணன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். விசாரணையில், அவா் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து வந்தவா் என்று தெரிய வந்தது என்று போலீஸாா் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com