போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

தேனி அருகே கோட்டூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 4:15 am

Din

தேனி அருகே கோட்டூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆணைமலையன்பட்டி குளத்துக்கரை தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அருண் (27). பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்த ராஜா மனைவி போதுமணி (50). இவா்கள் இருவரும் கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தனா்.

இவா்களை தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.