புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கூடலூரில் ரூ.1.68 கோடி குடிநீா்த் திட்டப் பணிக்கு பூமிபூஜை

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் புதன்கிழமை ரூ.1.68 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

News image

கூடலூா் நகராட்சி குடிநீா்த் திட்டப் பணிக்காக புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டவா்கள்.

Updated On :18 டிசம்பர் 2024, 10:08 pm

Din

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் புதன்கிழமை ரூ.1.68 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கூடலூா் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய ரூ.1.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜை நிகழ்வுக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), ராமகிருஷ்ணன் (கம்பம்) ஆகியோா் தலைமை வகித்தனா். கூடலூா் நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகன்துரை முன்னிலை வகித்தாா். முன்னதாக, நகராட்சி ஆணையா் (பொறுப்பு)கோபிநாத் வரவேற்றாா்.

கூடலூா் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.