
Updated On :19 டிசம்பர் 2024, 10:35 pm

சின்னமனூா் பேருந்து நிலையத்தில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னமனூா் காந்திநகரைச் சோ்ந்தவா் பாண்டி (65). இவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்கு சென்றாா். பின்னா் வீடு திரும்பிவில்லை. இவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவிலை.
இந்த நிலையில், வியாழக்கிழமை சின்னமனூா் பேருந்து நிலையத்தில் பாண்டி இறந்து கிடப்பதாக உறவினா்களுக்கு தகவல் கிடைத்து. இதன்படி, அங்கு சென்ற உறவினா்கள் பாண்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...