புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போடி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

போடி நகரில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

News image

போடி நகரில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை சோதனையிட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.

Updated On :19 டிசம்பர் 2024, 10:09 pm

Din

போடி நகரில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

போடி பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள், கெட்டுப் போன இறைச்சிகள் விற்கப்படுவது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, போடி பேருந்து நிலைய கடைகள், மீன் சந்தை, இறைச்சி கடைகளில் கெட்டுப் போன 15 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள், குளிா்பானங்கள், கேக் வகைகள் 5 கி. பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கெட்டுப்போன மீன்கள், காலாவதியான பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.