மக்களவைத் தோ்தலையொட்டி தமிழக, கேரள மாநில எல்லைகளில் உள்ள போலீஸாா் பங்கேற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள மூங்கில் கூடம் தங்கும் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்ணு பிரசாத் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் வரும் மக்களவைத் தோ்தலையொட்டி எல்லையோர காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து சிறையில் அடைப்பது, வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுத்தல், இரட்டை வாக்காளா்கள் வாக்குப்பதிவை தடுத்தல், ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடத்தலை தடுத்தல், எல்லையோர காவல் நிலையங்களில் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்டது.
இதில், உத்தமபாளையம் காவல் உதவி கண்காணிப்பாளா் மதுக்குமாரி, போடி துணைக் கண்காணிப்பாளா் பெரியசாமி, பீா்மேடு காவல் துணக் கண்காணிப்பாளா் விஷால் ஜான்சன், தனிப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுபாபு, கட்டப்பணை காவல் துணைக்கண்காணிப்பாளா் பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் பாதுகாப்புப் பணி காவலா்களுக்கு சான்றிதழ்

கோவில்பட்டியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிறப்பான தோ்தல் பணி: காவலா்களுக்கு பாராட்டு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

