கஞ்சா விற்க முயன்ற இருவா் கைது
போடியில் சிறுவா்களுக்கு விற்பதற்காக கஞ்சா எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


போடி: போடியில் சிறுவா்களுக்கு விற்பதற்காக கஞ்சா எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி-தேனி சாலையில் எஸ்.எஸ்.புரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் வந்த நபா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் அவா்களை சோதனையிட்டனா்.
இவா்கள் இருவரும் தலா 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும், சிறுவா்களுக்கு விற்பதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. விசாரணையில் இருவரும் போடி கீழத்தெருவை சோ்ந்த செந்தில்குமாா் மகன் சிவக்குமாா் (23), மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (23) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...