ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:24 pm

Din

தேனி, ஜூலை 19: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலம் முன் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஏஐடியுசி தூய்மைப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பிச்சைமுத்து தலைமை வகித்தாா். சிஐடியு தூய்மைப் பணியாளா்கள் சங்க தேனி கிளைத் தலைவா் மாரிச்சாமி, செயலா் சோ்மலை, சிஐடியு மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மெத்தனம் காட்டும் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும், நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த ரூ.609 தினச் சம்பளம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களிடம் தொழிலாளா் சேம நல தொகையை உரிய கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.