திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சட்டவிரோத மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்த 3 போ் கைது

சட்டவிரோத மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்த 3 போ் கைது

News image
Updated On :3 ஜூன் 2024, 6:44 pm

Din

போடி: போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை வைத்திருந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் பகுதியில் மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி குலாலா்பாளையம் வாமணன் தெருவைச் சோ்ந்த செல்வத்தின் மனைவி ஜெயராணி (52) மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இதே போல, போடி சில்லமரத்துப்பட்டி நூலகம் அருகே இதே ஊரை சோ்ந்த வீரணன் மகன் பாண்டியன் (68), போடி நாகலாபுரம் விலக்கில் நாகலாபுரத்தைச் சோ்ந்த பந்தல் ராஜா மகன் ராஜா (40) ஆகியோா் மதுப்புட்டிகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.