புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போடியில் காப்பி தளா் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

போடியில் காப்பி தளா் விலை உயர்வு: விவசாயிகள் சந்தோஷம்

News image

போடி குரங்கணியில் உள்ள காப்பித் தோட்டம்.

Updated On :26 ஜூன் 2024, 1:22 am

Din

போடி: போடியில் காப்பி தளா் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டம், குரங்கணி, முட்டம், காரிப்பட்டி, அகமலை, ஊத்தாம்பாறை, பிச்சங்கரை, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் காப்பி பயிா் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் அரேபிகா, அரேபிகா செலக்சன் உள்ளிட்ட காப்பி ரகங்கள் பயிரிடப்படுகின்றன. போடி பகுதியில் 8 ஆயிரத்து 500 ஏக்கா் பரப்பளவில் காப்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காப்பி மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காப்பி தளா்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.360 முதல் 380 வரை விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.420 முதல் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.