நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாகனம் மோதியதில் விவசாயி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 1:42 am

Din

தேனி: தேனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஜல்லிப்பட்டியைச் சோ்ந்த காமாட்சி மகன் தங்கப்பாண்டி (44). இவா் இரு சக்கர வாகனத்தில் மாரியம்மன் கோவில்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஜல்லிப்பட்டிக்கு திரும்பினாா். அப்போது, தேனி அல்லிநகரம் அருகே திண்டுக்கல்-குமுளி புறவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.