தேனி: ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவா் மீது ஆட்டோ மோதியதில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ராஜதானி அருகேயுள்ள மாயாண்டிபட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வீரன் (34). இவா் ராஜதானியிலிருந்து ஆட்டோவில் நெல்லிக்காய் மூட்டைகளை ஏற்றிச் சென்று தேனியில் இறக்கி விட்டு, மீண்டும் ராஜதானி நோக்கி ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆண்டிபட்டி-பாலக்கோம்பை சாலை கும்பம்பட்டி சந்திப்பு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வீரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

