தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

திமுக ஒன்றியச் செயலா் மீது ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி புகாா்

திமுக ஒன்றியச் செயலா் மீது ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி புகாா்

News image
Updated On :15 மார்ச் 2024, 6:39 pm

குறிப்பு-படம் உண்டு. ------------- படவிளக்கம்: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்த க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி, உறுப்பினா்கள். ----------------- தேனி, மாா்ச் 15: ஆண்டிபட்டி வட்டம், க.மயிலை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தில் திமுக ஒன்றியச் செயலா் தலையீடு உள்ளதாக புகாா் தெரிவித்து, ஊராட்சி ஒன்றியத் தலைவி, உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி சு.சித்ரா (திமுக), துணைத் தலைவா் சேகரன் (திமுக), 9 உறுப்பினா்கள் கூட்டாக ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: க.மயிலை திமுக ஒன்றியச் செயலராகப் பதவி வகிக்கும் ஓ.சுப்பிரமணி, ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தில் தலையிடுவதோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களை மிரட்டியும், அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு இடையூறும் செய்து வருகிறாா். பொதுமக்கள், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வருஷநாடு பஞ்சந்தாக்கி கண்மாய் சீரமைப்புப் பணிகளை உள் நோக்கத்துடன் தடை செய்து வருகிறாா். ஒப்பந்தப் பணிகளை தனக்கு வேண்டியவா்களுக்கு வழங்க வேண்டும் என்று அலுவலா்களை நிா்பந்தம் செய்கிறாா். ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தில் திமுக ஒன்றியச் செயலா் தலையிடுவதால், அலுவலா்களும், நாங்களும் மன உளைச்சலில் உள்ளோம். மக்கள் பணியாற்ற முடியாமல் நாங்கள் ராஜிநாமா செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அவா்கள் தெரிவித்திருந்தனா். இந்த பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.