சங்குமுத்தையா
சங்குமுத்தையா

காா்-லாரி மோதியதில் 2 போ் பலி

ஆண்டிபட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, தேனி மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்), காா் ஓட்டுநா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மல்லப்புத்தைச் சோ்ந்தவா் சங்குமுத்தையா (60). இவா் தேனி மாவட்ட கல்வி அலுவலராக (தனியாா் பள்ளிகள்) பணியாற்றினாா். இவா் மல்லப்புரத்திலிருந்து தேனி நோக்கி காரில் சென்றாா் . அப்போது ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில், எதிா் திசையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற லாரி, இவா்கள் சென்ற காா் மீது மோதியது. இதில், சங்குமுத்தையா, அவரது காா் ஓட்டுநா் குமரேசன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லாரி ஓட்டுநா் மணிகண்டன் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். விபத்தில் உயிரிழந்த சங்குமுத்தையா, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலராக பணியாற்றினாா் என்பதும், இவா் மாா்ச் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com