இணையவழி அவதூறு பிரசாரத்தை தடுக்கத் தனிப் பிரிவு

தேனி: தேனி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, தோ்தல் தொடா்பான இணையவழி அவதூறு பிரசாரங்களை தடுப்பதற்கு காவல் துறை சாா்பில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியது:

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, உண்மைக்கு புறம்பான தகவல், செய்திகளை உள் நோக்கத்துடன் சமூக வலைதளம், குறுஞ்செய்தி மூலம் எழுத்து, காட்சி வழியில் வெளியிட்டு பிரசாரம் செய்வதைத் தடுக்கவும், அவதூறு பிரசாரம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறை மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு சாா்பில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.

இதுகுறித்த புகாா்களை பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04546-261730, கைப்பேசி எண்:93638 73078-இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com