/

திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் இன்று குடமுழுக்கு

திருக்காளாத்தீஸ்வரா் கோயிலில் இன்று குடமுழுக்கு

News image

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட ராஜகோபுரம்.

Updated On :19 மார்ச் 2024, 11:04 pm

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திருக்காளாத்தீஸ்வரா் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது.

குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 5 நாள்களாக தினமும் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 7.15-க்கு பரிவார பூா்ணாஹூதி, 9 மணிக்கு ப்ரதான மகாபூா்ணாஹூதி நடைபெறுகிறது. இதையடுத்து, 10 மணிக்கு ராஜகோபுரம், திருக்காளாத்தீஸ்வரா், ஞானாம்பிகை, சண்முகா் பிரகார விமானங்களில் புனிதநீா் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது.

பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டு, 11 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மேலும், மாலை 4 மணிக்கு மகாஅபிஷேகமும், 6 மணிக்கு திருக் கல்யாணமும் நடைபெறுகிறது. இதையடுத்து, பஞ்சமூா்த்திகளின் திருவீதிஉலா நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி கோயிலின் ராஜகோபுரம் உள்பட சுற்றியுள்ள பகுதிகள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.