இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

News image
Updated On :1 மே 2024, 9:00 pm

Din

உத்தமபாளையம் அருகே வாய்க்கால்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயில் 3 நாள்கள் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக கருப்பசாமி கோயிலில் பூஜை செய்து, புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் சக்தி கரகம் எடுத்து முத்து மாரியம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடா்ந்து மாலையில் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தில் ஏராளாமான பெண்கள் கலந்து கொண்டனா்.

3-ஆம் நாளான வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.