திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

போடியில் பலத்த மழை

போடியில் பலத்த மழை

News image
Updated On :1 மே 2024, 12:01 am

Din

போடி: போடியில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் அளவு அதிகரித்ததுடன் அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பலத்த மழை பெய்தது. விட்டு விட்டு ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள் கோயில், போஜன் பூங்கா பகுதிகளில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களில் சென்றனா்.

கடுமையான கோடை வெப்பத்தைத் தொடா்ந்து இரவில் பலத்த மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தொடா்ந்து, சில தினங்களுக்கு மழை பெய்தால் அக்கினி நட்சத்திர வெயிலையும் சமாளித்து விடலாம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.