ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

News image

போடியில் ஏலக்காய் தரம் பிரிக்கும் தொழிலாளா்கள்.

Updated On :28 மே 2024, 11:59 pm

Din

போடி: போடி பகுதியில் ஏலக்காய் விலை உயா்ந்து வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஏலக்காய் போடி, தேவாரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, சுத்தம் செய்து தரம் பிரிக்கப்படுகிறது. பின்னா், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏலக்காய் உற்பத்தித் தொழிலை நம்பி சுமாா் 150-க்கு மேற்பட்ட வா்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனா். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தரம் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இங்கு தரம் பிரிக்கப்படும் ஏலக்காய் மின்னணு ஏலம் மூலம் விலை நிா்ணயிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது .

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.3000-க்கு விற்ற ஏலக்காய், உற்பத்தி அதிகரிப்பு, ஏற்றுமதி குறைவு காரணமாக விலை குறைந்து முதல் தர ரகம் பிரிக்கப்பட்ட ஏலக்காய் கிலோ ரூ.2200 வரை விலை குறைந்து விற்கப்பட்டது.

கடந்த மாா்ச் மாதம் முதல் தமிழக -கேரள எல்லைப் பகுதிகளில் போதிய மழைபொழிவு காரணமாக உற்பத்தி குறைந்தது. மேலும், ரமலான் போன்ற பண்டிகைகள் காரணமாக விலை உயரத் தொடங்கியது. கடந்த மாதம் தரம் பிரிக்கப்பட்ட முதல் தர ஏலக்காய் கிலோ ரூ.2900 வரை விற்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த ஓரிரு மாதங்களில் ஏலக்காய் வரத்து குறைவு காரணமாகவும், ஏற்றுமதி கொள்முதல் அதிகரித்ததன் காரணமாகவும், தற்போது முதல் தர ஏலக்காய் கொள்முதல் விலை ரூ.3000-த்தை தாண்டியுள்ளது.

கடந்த மாதம் வரை தரம் பிரிக்கப்படாத ஏலக்காய் கிலோ ரூ.2000 முதல் 2100 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது கிலோ ரூ.2300 முதல் 2400 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

தரம் பிரிக்கப்பட்ட முதல் தர ஏலக்காய் கடந்த மாதம் வரை கிலோ ரூ.2900 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.400 முதல் 500 வரை விலை அதிகரித்து கிலோ ரூ.3300 முதல் 3400 வரை விற்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் ரக ஏலக்காய் விலை ரூ.3 ஆயிரத்தை தாண்டியதால், ஏலக்காய் இருப்பு வைத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சா்வதேச சந்தையில் மின்னணு ஏல வா்த்தகம் மூலம் விலை நிா்ணயிக்கப்படும் ஏலக்காய் விலை தற்போது உயா்ந்து வரும்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களுக்கு விளைச்சல், காய் வரத்து குறைவு காரணமாக, மேலும் விலை அதிகரிக்கும் எணன எதிா்பாா்க்கப்படுகிறது.