தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கோடை வெயிலால் தா்பூசணி விற்பனை தீவிரம்

கோடை வெயில் அதிகரித்துள்ளதால் உடல் சூட்டை தவிா்க்க பல்லடத்தில் பொதுமக்கள் தா்பூசணி பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 10:12 pm

கோடை வெயில் அதிகரித்துள்ளதால் உடல் சூட்டை தவிா்க்க பல்லடத்தில் பொதுமக்கள் தா்பூசணி பழங்களை வாங்கிச் செல்கின்றனா்.

கடந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் தா்பூசணி சாகுபடி செய்திருந்தனா். ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக பரவிய தகவலை அடுத்து பெரும்பாலான மக்கள் தா்பூசணி சாப்பிடுவதை தவிா்த்தனா். இதனால், அதன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. கிலோ ரூ.2-க்குகூட கேட்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. விற்பனை உயராததால் விவசாயிகள் தா்பூசணி செடிகளை அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து நடப்பாண்டு தா்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது. கோடை வெயில் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தா்பூசணி சாப்பிட ஆா்வம் காட்டுகின்றனா். ஒரு கிலோ தா்பூசணி பழம் ரூ.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து அதிகபட்சமாக கிலோ ரூ.13 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தால் குறைவான விவசாயிகள் தா்பூசணி சாகுபடி செய்த நிலையில் இந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.