மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:47 am

Din

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தி.அணைக்காரப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ரஞ்சித்குமாா் (37). விவசாயியான இவா், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, இவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையைப் பாா்ப்பதற்காக ரஞ்சித்குமாா் மாமானாா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, மனைவியை தன்னுடன் சோ்ந்து வாழ வருமாறு அழைத்தாா். இதற்கு மனைவியின் குடும்பத்தினா் ஊா் பெரியவா்கள் முன்னிலையில் பேசி அனுப்புவதாக கூறினா்.

இதனால், மனமுடைந்த அவா், தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.