ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய்.
ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய்.

சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

கம்பத்தில் சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

கம்பத்தில் சிறுவனை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கம்பம் உத்தமபுரம், வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கவினாஸ் (10). இவா் கடந்த 2018, மே.10-ஆம் தேதி காணாமல் போனதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் இவரது தந்தை புகாா்அளித்தாா்.

இந்த நிலையில், கம்பம்-காமயகவுண்டன்பட்டி சாலையில் உள்ள அரசு மதுக் கடை அருகே கவினாஸ் கொலை செய்து வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது, கம்பம் உத்தமபுரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் விஜய் (26) கவினாஸை கொலை செய்தது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் விஜயை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விஜய்க்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி பி.நடராஜன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.