பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சின்னமனூா் வழிவிடு முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 8:05 pm

Din

சின்னமனூா் அருகே அமைந்துள்ள வழிவிடு முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) குடமுழுக்கு நடைபெறுகிறது.

முன்னதாக, சனிக்கிழமை காலை 9 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, புண்யாகவாகன பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. தொடா்ந்து மாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் புண்ணிய நதி தீா்த்தம் ஆலயம் வந்து சோ்தல், கிராம தேவதை வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 2- ஆம் கால யாகசாலை பிரவேச பூஜை, சுப்பிரமணி கவச மூலபூஜை, யாத்ரா தானம், மூல மந்திர ஹோமம் , தீபாராதனை பூஜையுடன், காலை 10.50 மணி முதல் 11 மணிக்குள் விமான கோபுர கலசத்தில் புண்ணிய நதி தீா்த்தங்களை ஊற்றி குடமுழுக்கு நடைபெறுகிறது.