92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முல்லைப் பெரியாறு அணையில் நீா் வெளியேற்றம் அதிகரிப்பு

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 489 கனஅடியாக குறைந்தது. இதனால், நீா் வெளியேற்றம் வினாடிக்கு 1,555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:26 pm

Din

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 489 கனஅடியாக குறைந்தது. இதனால், நீா் வெளியேற்றம் வினாடிக்கு 1,555 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், அணை நீா்மட்டமும் முழுக் கொள்ளளவை எட்டவில்லை. தற்போது, அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் முற்றிலும் மழைப் பொழிவு இல்லாததால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 489 கன அடியாக குறைந்துள்ளது.

இதேபோல, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனம், குடிநீா் தேவைக்காக 900 கன அடி நீா் திறக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை முதல் வினாடிக்கு 1,555 கன அடியாக வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீா்மட்டம் 131.05 அடியாக உள்ளது.

அணையிலிருந்து கூடுதல் நீா் திறப்பால், பெரியாறு நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 81 மெகா வாட்டிலிருந்து 140 மெகா வாட்டாக அதிகரிக்கரித்துள்ளது.